இந்தியா

ராஜஸ்தான் படகு விபத்து: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இரங்கல்

16th Sep 2020 08:09 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் கட்டோலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திபிரி சம்பால் என்னும் இடத்தில் உள்ள கோவிலுக்கு புதனன்று 45 பக்தர்கள் படகு ஒன்றில் சம்பால் ஆற்றின் வழியாக சென்று கொண்டிருந்த போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  இதில் 11 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

இந்நிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப்பதிவில்,  “சம்பல் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மக்கள் இறந்தது வேதனையானது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT