இந்தியா

அந்தமான்: போர்ட் பிளேர் விமான நிலையத்தில் புதிய முனையம்

16th Sep 2020 05:57 PM

ADVERTISEMENT

போர்ட் பிளேர் விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் உள்ள போர் பிளேர் விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 18 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே விமானநிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகள் வந்து செல்ல இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள இந்திய விமான நிலைய ஆணையம், போர்ட் பிளேயரில் விமான நிலைய முனைய கட்டடம் அமைக்கும் பணி 65 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மத்தியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முனைய கட்டடம் தரைத்தளம், முதல் தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதில் தரைத்தளம் தொலைநிலை வருகை, புறப்பாடு மற்றும் சேவை பகுதிக்காகவும், மேல்தளம் புறப்படும் பயணிகளுக்கான நுழைவு வாயில் மற்றும் வருகை பயணிகளுக்கு வெளியேறும் வாயிலாகவும், முதல் தளம் சர்வதேச பயணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. 

கடற்கரையையொட்டி அமைவதால், சிப்பி வடிவில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முனையம் அமைக்கப்பட உள்ளது.

Tags : போர்ட் பிளேயர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT