இந்தியா

ஹிமாசலில் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி

16th Sep 2020 09:16 AM

ADVERTISEMENT

ஹிமாசலப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பொதுமுடக்க தளர்வுகளில் மக்கள் இ-பாஸ் இன்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதன்படி, ஹிமாசலப் பிரதேசத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் மாநிலத்திற்குள், மாநிலத்திற்கு வெளியே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை எனவும் சுற்றுலாப் பயணிகளும் இ-பாஸ் இன்றி ஹிமாசல் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, செப்டம்பர் 10 முதல் ஹிமாசலில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : himachal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT