இந்தியா

கேரளத்தில் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பாஜக பேரணி

16th Sep 2020 04:19 PM

ADVERTISEMENT

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக்கோரி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் தொடர்புடையதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதில் ஆஜராக மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் ஜலீலை கண்டித்து பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ்  கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் கலீலின் அறிக்கைகளை ஆராய்ந்து மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையெ அமைச்சர் கலீல் பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்துகொண்டு அமைச்சர் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT