இந்தியா

தில்லி: மருத்துவமனை குப்பை சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

16th Sep 2020 03:54 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை குப்பை சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

தில்லியில் எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற 7 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில் மருத்துவமனை நோயாளிகள் உள்பட யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT