இந்தியா

தில்லி: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45% அதிகரிப்பு

16th Sep 2020 05:09 PM

ADVERTISEMENT

தில்லியில் கடந்த 10 நாள்களில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தில்லியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 16,576-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே இது குறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகி வந்தன.

ஒரே நாளில் அதிகபட்சமாக செப்டம்பர் 12-ஆம் தேதி 4,321 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இம்மாத தொடக்கத்திலிருந்து புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

ADVERTISEMENT

இதன் விளைவாக கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவையும் மக்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி 10,514-ஆக இருந்த கரோனா பாதிப்பு, செப்டம்பர் 15-ஆம் தேதி 16,576-ஆக அதிகரித்துள்ளது. 

செப்டம்பர் 6-ஆம் தேதி 1,076-ஆக இருந்த கரோனா பாதிப்பு, 15-ஆம் தேதி 1,560-ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 50 சதவிகிதமும், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 45 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT