இந்தியா

5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

16th Sep 2020 05:38 PM

ADVERTISEMENT

தெலங்கானா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் கேரளம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தின் கடலோரப்பகுதிகள், தெலங்கானா, மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதிகள், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரை பரவலாக மழை பெய்யும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : RAIN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT