இந்தியா

ஒடிசா: வெள்ள பாதிப்புகளைக் கண்டறிய மத்திய குழு வருகை

16th Sep 2020 11:52 AM

ADVERTISEMENT

ஒடிசாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பிட 6 பேர் அடங்கிய மத்திய அரசுக் குழு ஒடிசாவிற்கு வருகை புரிந்துள்ளது.

ஒடிசாவில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிரம்பிய அணைகள் திறக்கப்பட்டதால், ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும், பாலங்கள் சேதமும், கட்டட இடிபாடுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் பல்வேறு நபர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கரோனா பரவலுக்கு எதிராக கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு சேதமதிப்புகளை கண்டறிய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

உள்துறை அமைச்சாக அதிகாரிகள் உள்பட 6 பேர் அடங்கிய குழு இன்று (புதன்கிழமை) ஒடிசாவில் வெள்ளபாதிப்புகளை பார்வையிட வருகை புரிந்துள்ளன. 2 நாள்கள் தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து சேத மதிப்புகளை அவர்கள் மதிப்பிட உள்ளனர்.

Tags : ஒடிசா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT