இந்தியா

கரோனா பொதுமுடக்கத்தால் 85% குறைந்த ஏர் இந்தியா வருவாய்

16th Sep 2020 05:06 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏர் இந்திய விமான நிறுவனத்தின் வருவாய் 85 சதவிகிதம் சரிந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி வெளிநாட்டு விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதேபோல் உள்நாட்டு விமான சேவைகள் மார்ச் மாதம் 25 முதல் மே மாதம் 24 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விமானப் போக்குவரத்துக் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதன்படி,  இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் 74 ஆயிரத்து 887 ஆக இருந்த விமானத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை ஜூலை மாத இறுதியில் 69 ஆயிரத்து 589 ஆக குறைந்துள்ளது. அதேபோல் மார்ச் மாதம் 67 ஆயிரத்து 760 ஆக இருந்த விமான நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையானது ஜூலை மாத இறுதியில் 64 ஆயிரத்து 514 ஆக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமைச்சர் அளித்த தகவலின்படி கடந்த 2019ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் ரூ.25 ஆயிரத்து 517 கோடியாக இருந்த இந்திய விமான சேவையின் வருவாய் நடப்பாண்டில் ரூ.3 ஆயிரத்து 651 கோடியாக குறைந்துள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 535 கோடி குறைந்து  ரூ.1,531 கோடியாக உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 66 கோடியாக இருந்தது குறிபிடத்தக்கது.

Tags : air india
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT