இந்தியா

பாகிஸ்தான் பிடியில் 270 இந்திய மீனவர்கள்: பாஜக எம்.பி.

16th Sep 2020 08:12 PM

ADVERTISEMENT


பாகிஸ்தான் பிடியில் 270 இந்திய மீனவர்களும், 1,200 படகுகளும் இருப்பதாக பாஜக மக்களவை எம்.பி. லாலு பாய் படேல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மக்களவையில் இன்று (புதன்கிழமை) அவர் பேசியதாவது:

"இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். குஜராத், மகாராஷ்டிரம், டாமன் மற்றும் டையூவைச் சேர்ந்த 270 இந்திய மீனவர்கள் மற்றும் சுமார் 1,200 படகுகள் பாகிஸ்தான் பிடியில் உள்ளன. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையைத் தொடங்குவது பற்றி பாகிஸ்தானிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேச வேண்டும். அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடிதம் கூட எழுத முடியவில்லை."

Tags : fishermen
ADVERTISEMENT
ADVERTISEMENT