இந்தியா

ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி; மூவர் மாயம்!

16th Sep 2020 05:12 PM

ADVERTISEMENT

 

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பக்தர்கள் பலியான சம்பவம் நிகழந்துள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் கட்டோலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திபிரி சம்பால் என்னும் இடத்தில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு புதனன்று 45 பக்தர்கள் படகு ஒன்றில் சம்பால் ஆற்றின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  இதில் 11 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர். மூன்று பேர் மாயமாகி விட்டனர். எஞ்சியோரை பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்டனர்.

விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் அசோக் கெலாட், மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT