இந்தியா

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

15th Sep 2020 05:51 PM

ADVERTISEMENT

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பேரிடர் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜேஇஇ தேர்வும், செப். 13 ஆம் தேதி நீட் தேர்வும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெற்றது. 

நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நிராகரித்து விட்டது. 

இந்நிலையில், கரோனா தொற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

Tags : NEET
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT