இந்தியா

லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீரவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்

15th Sep 2020 03:47 PM

ADVERTISEMENT

சீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

லடாக் எல்லை விவகாரம் குறித்து இன்று மக்களவையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், 

இந்திய - சீன எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. எல்லை நிர்ணயம் குறித்து சீனா உடன்படவில்லை. எனவே, தற்போதுவரை சீனாவுடன் எந்த பரஸ்பர தீர்வும் இல்லை. 

எல்லை தொடர்பாக 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை சீனா மதிக்கவில்லை.

ADVERTISEMENT

லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள், ஆயுதப் படைகள் என சீனா பெரும் அணியைத் திரட்டியுள்ளது. கிழக்கு லடாக், கோக்ரா, கொங்கா லா, பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் அணிகள் திரண்டுள்ளன. இந்த பகுதிகளில் இந்திய இராணுவமும் தனது படைகளை திரட்டியுள்ளது. சீனத் தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

லடாக் எல்லையில் சீனா அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும். சீனாவுடன் பிரச்னையை சுமுகமாக தீர்க்கவே இந்தியா விரும்புகிறது. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்' என்று பேசியுள்ளார். 

Tags : China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT