இந்தியா

தகவல் தொடர்பு செயலிகளுக்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் தேவையில்லை: டிராய்

15th Sep 2020 01:34 PM

ADVERTISEMENT

முகநூல், வாட்சப் உள்ளிட்ட தகவல் தொடர்பு செயலிகளுக்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் விதிப்பது தற்போது தேவையில்லை என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

முகநூல், வாட்சப் போன்ற தகவல் தொடர்பு செயலிகளை இடைமறித்து கண்காணிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் தொடர்பு நிறுவனங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

மத்திய அரசும் தகவல்தொடர்பு செயலிகளில் பகிரப்படும்  தகவல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து  குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும் செய்திகளை அனுப்புவது உள்ளிட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் முறைகளில் சிலக் கட்டுப்பாடுகளையும் தகவல் தொடர்பு செயலிகள் அமல்படுத்தின.

ADVERTISEMENT

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்,  “தகவல் தொடர்பு செயலிகளில் இடைமறித்து கண்காணிக்கும் முறையை மேற்கொண்டால் அது பாதுகாப்பு முறையை பலவீனப்படுத்த வாய்ப்பாக அமையும்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இத்தகைய நடவடிக்கைகள் சட்டம் அனுமதித்துள்ள மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுதலிப்பது போன்றாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

Tags : TRAI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT