இந்தியா

பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான 7 திட்டங்கள்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

15th Sep 2020 06:23 PM

ADVERTISEMENT

பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான  7 உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி செவ்வாய்கிழமை அடிக்கல் நாட்டினார்.

விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். குடிநீர் விநியோகம் தொடர்பான 4 திட்டங்களும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பான 2 திட்டங்களும், நதிநீர் மேம்பாடு தொடர்பான ஒரு திட்டத்திற்உம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுடன் ஒருங்கிணைந்து  மத்திய அரசு கூடுதல் நேரம் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக்கு அருகே அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு, கங்கை நதியை சுத்தமாக வைத்திருக்க மாநிலத்தில் ரூ .6,000 கோடி மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் மோடி தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT