இந்தியா

தாணேவில் புதிதாக 1,793 பேருக்கு கரோனா

15th Sep 2020 11:40 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,739 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,47,847 ஆகக் உயர்ந்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய கரோனா நிலவரப்படி..

கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,949 ஆக உயர்ந்துள்ளது.  

ADVERTISEMENT

புதிய பாதிப்புகளில், கல்யாண் நகரத்திலிருந்து 500 பேரும், தாணே நகரத்திலிருந்து 403 பேரும், நவி மும்பையிலிருந்து 342 பேரும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள தொற்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன. இதுவரை, கல்யாண் - 35,735, நவி மும்பை - 31,005, தாணே நகரம் - 30,601 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. தாணேவில் மட்டும் இதுவரை 901 இறப்புகளும், அதனைத் தொடர்ந்து கல்யாண் -734 மற்றும் நவி மும்பை -665 ஆக பதிவாகியுள்ளன. 

தற்போது வரை, மாவட்டத்தில் 18,206 பேர் தொற்று பாதித்து மருத்துவமனையில் உள்ளனர். 1,25,686 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன என்று தாணே மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் மாலவி தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT