இந்தியா

ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு 10 நாள் காவல்

14th Sep 2020 09:49 PM

ADVERTISEMENT


தில்லி வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்தை 10 நாள்கள் காவல் துறை காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உமர் காலித்திடம் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம்  காணொலி வாயிலாக தில்லி நீதிமன்றம் முன்பு உமர் காலித் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உமர் காலித்தை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

Tags : Umar Khalid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT