இந்தியா

50 லட்சத்தை எட்டும் பாதிப்பு; பிரதமரோ மயில்களுடன் பிசியாக இருக்கிறார்: ராகுல் காந்தி

14th Sep 2020 11:43 AM

ADVERTISEMENT

திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு 50 லட்சத்தை கடக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு இந்த வாரத்தில் 50 லட்சத்தைக் கடக்க உள்ளது. சுமார் 10 லட்சம் பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒரு நபரின் 'ஈகோ'வினால் திட்டமிடப்படாத பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவியுள்ளது. யாருடைய உதவியும் இன்றி தனித்து செயல்படுங்கள் என மோடி அரசு கூறுகிறது. அதாவது, பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT