இந்தியா

ஆப்கனில் சாலையோர குண்டுவெடிப்பு: 5 ராணுவ வீரர்கள் பலி

14th Sep 2020 04:26 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானின், மேற்கு பாட்கிஸ் மாகாணத்தின் அப்கமாரி மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது சாலையோர குண்டு வெடித்ததில் 5 ஆப்கானிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் நசீர் நசரி திங்களன்று தெரிவித்தார். 

தெஹிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் சாலையோர பகுதியில் புதைத்து வைத்த குண்டு ராணுவ வாகனம் செல்லும்போது வெடித்துள்ளது. இதில், வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை தலிபான் இயக்கம் பொறுப்பேற்கவில்லை. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT