இந்தியா

நாடாளுமன்ற தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைங்கள்: பிரதமர் மோடி

14th Sep 2020 08:55 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற அவைகளின் மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள எம்.பி.க்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடமையாற்ற முன் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என்றார்.

ADVERTISEMENT

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT