இந்தியா

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இன்று 4,198 பேருக்குத் தொற்று

14th Sep 2020 03:43 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒரேநாளில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய கரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

திங்கள்கிழமை நிலவரப்படி 4,198 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. இன்றைய பாதிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டில் இதுவரை 1,55,005 பேர்  பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

ADVERTISEMENT

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 637 ஆக உயர்ந்துள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 2,476 பேருக்கும், அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 1,722 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்று பாதித்து 35,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 1,18,642 பேர் இந்த நோயால் குணமாகியுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை 49,393 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 24.72 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT