இந்தியா

கொல்கத்தாவில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்

14th Sep 2020 12:06 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தாவில் ஐந்து மாதங்களுக்குப் பின்பு மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல்(செப்.14) மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 

ADVERTISEMENT

மெட்ரோ சேவைகள் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 3000 பேர் பயணம் செய்துள்ளனர் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில்வே பொது மேலாளர் மனோஜ் ஜோஷி  தெரிவித்துள்ளார். 

மேலும், மெட்ரோவில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி உள்பட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

Tags : Metro rail services
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT