இந்தியா

நாட்டில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா; 1136 பேர் பலி

14th Sep 2020 11:19 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டில் ஒரே நாளில் 92,071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 9,86,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை கரோனா பாதித்த 48 ஆயிரம் பேரில், 37,80,108 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதித்த 1,136 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தற்போது 2,80,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 29,115 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரம் 95,733 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,846 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT