இந்தியா

கரோனா தொற்றில் இருந்து மீண்டார் ஹரியாணா முதல்வர்

14th Sep 2020 06:18 PM

ADVERTISEMENT

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், களப்பணியில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி குர்கானில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், முழுவதுமாக குணமடைந்த நிலையில் இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். 

தான் விரைவான குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மற்றும் தனது சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், அரசும், அதிகாரிகளும் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : ஹரியாணா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT