இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு

14th Sep 2020 05:54 PM

ADVERTISEMENT


மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஹரிவன்ஷைத் தேர்வு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, மனோஜ் குமார் ஜாவை மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் ஹரிவன்ஷ் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

இதன்மூலம், ஹரிவன்ஷ் இரண்டாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராகியுள்ளார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் ஹரிவன்ஷ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Harivansh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT