இந்தியா

ஜார்கண்ட்டில் முன்னாள் மாவோயிஸ்ட் அடித்துக் கொலை

14th Sep 2020 06:58 PM

ADVERTISEMENT

 

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் ஒருவர் கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் தெசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் திர்கி (38). இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கமான இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் முன்னாள் ஊழியராவார்.  கடந்த சனிக்கிழமை அன்று கிராமத்தில் நடந்த ஒரு மொபைல் போன் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தீபிற்கும் கிராம  மக்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று கிராமத்தைச் சேர்ந்த பையன் ஒருவனை சந்தீப் தாக்கியதோடு, அவனை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து கிராம மக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத மற்றொரு தரப்பினர் சுமார் 50 பேர் திங்களன்று காலை கும்பலாக சந்தீப் வீட்டிற்குச் சென்று, அவரை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சந்தீப் அங்கேயே இறந்து விட்டார்.

ADVERTISEMENT

சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த போலீசார் சந்தீப்பின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது வீட்டிலிருந்து ஒரு கத்தி மற்றும் ஒன்பது கோடாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT