இந்தியா

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

14th Sep 2020 08:53 AM

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நீட் தோ்வு அச்சத்தால், தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 3 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டனா். இதற்கு, அரசியல் தலைவா்களும் மாணவா்களின் குடும்பத்துக்கு இரங்கலையும், அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அதே சூழலில், தமிழகம் முழுவதும் மாணவா்கள், அரசியல் கட்சியினா் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

இதையடுத்து நீட் தேர்வை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்திருந்தார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கையில் கையில் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் கூட்டணிக் கட்சி எம்பிகளும் பங்கேற்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்திருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT