இந்தியா

கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு கரோனா: பினராயி விஜயன்

14th Sep 2020 07:49 PM

ADVERTISEMENT


கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30,486 பேர் உள்ளனர். 79,813 பேர் குணமடைந்துள்ளனர். பொது முடக்க தளர்வுகள் அமலில் உள்ளதால், கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். 

நிலவும் சூழலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கல்வி நிறுவனங்களைத் திறப்பது சாத்தியமில்லை" என்றார் அவர். 

ADVERTISEMENT

மேலும் 15 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT