இந்தியா

மக்களைவை எம்.பி.க்கள் 17 பேருக்கு கரோனா தொற்று

14th Sep 2020 03:34 PM

ADVERTISEMENT

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி, செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் 17 மக்களைவை எம்.பி.க்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் 1 வரை 18 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மக்களவை எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மக்களவை உறுப்பினர்கள் மீனாட்சி லேகி, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஒய்ஆர்எஸ் காங்கிரஸில் இருவர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி. கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

ADVERTISEMENT

Tags : parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT