இந்தியா

கேரளம்: மன அழுத்தத்தால் சுகாதாரப் பணியாளர் தற்கொலை

11th Sep 2020 06:23 PM

ADVERTISEMENT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக சுகாதாரப் பணியாளர் எழுதிவைத்த கடிதத்தை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே உதயகுளங்கரை பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார்.

மேலும் சுகாதாரப் பணியாளர் இறந்த இடத்தில் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது, இது குறித்து எந்தவித புகாரும் வரவில்லை என்றும், எனினும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT