இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1600 ஆகக் குறைப்பு

11th Sep 2020 09:35 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2500 யிலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக் கட்டணம் இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.2500 கட்டணம் குறைக்கப்பட்டு ரூ.1600ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.4500 ஆக இருந்த கரோனா பரிசோதனை கட்டணம் 2500 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 45 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Uttarpradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT