இந்தியா

விடுதிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மகாராஷ்டிர அரசு

11th Sep 2020 08:26 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட ஹோட்டல்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிர மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட ஹோட்டல்கள், தனியார் விடுதிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் ஹோட்டல்கள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா அறிகுறி உள்ள நபர்களை அனுமதிக்கக் கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது போன்றவை கட்டாய நடைமுறைகளாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தவிர தனியார் விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விவரங்களை மண்டல அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT