இந்தியா

மேற்குவங்கம்: சாலை விபத்தில் காவலர் உள்பட 3 பேர் பலி

11th Sep 2020 03:25 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மேற்குவங்க மாநிலம் தாத்பூர் பகுதியில் 12வது பட்டாலியனின் ஆயுதப்படை காவலர் தேபாஸ்ரீ சாட்டர்ஜி தமது உதவியாளர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது தாத்பூர் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது  கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூத்த காவலர் தேபாஸ்ரீ சாட்டர்ஜி உள்பட அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தவிபத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த காவலர் சாட்டர்ஜி, அவரது பணியால் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றவர் என்றும் அவர் கூறினார். 

ADVERTISEMENT

Tags : மேற்குவங்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT