இந்தியா

கேரளத்தில் 2-ஆவது அமைச்சருக்கு கரோனா தொற்று

11th Sep 2020 12:15 PM

ADVERTISEMENT

கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், களப்பணியில் உள்ள பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதன்தொடர்ச்சியாக கேரள மாநில தொழில் துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், நிதி அமைச்சருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஆகியோர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT