இந்தியா

சுவாமி அக்னிவேஷ் காலமானார்

11th Sep 2020 09:24 PM

ADVERTISEMENT

உடல்நலக் குறைவால் சுவாமி அக்னிவேஷ் இன்று காலமானார். 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஆரிய சமாஜத்தில் இணைத்தார். பின்னர் 2004-2014 வரை ஆரிய சமாஜத்தின் உலகக் குழுவின் தலைவராக பதவி வகித்தார்.  மேலும் சமூக சேவையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக சுவாமி அக்னிவேஷ் கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 80.  இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சுவாமி அக்னிவேஷ்-க்கு மாலை 6 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டது. 

அதனைத்தொடர்ந்து 6.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். "சுவாமி அக்னிவேஷின் மறைவு ஒரு பெரிய சோகம். மனிதநேயத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு உண்மையான போர்வீரன்" என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT


 

Tags : Andhra
ADVERTISEMENT
ADVERTISEMENT