இந்தியா

ஒடிசாவில் மேலும் 3,996 பேருக்குத் தொற்று: 14 பேர் பலி

11th Sep 2020 01:02 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் கரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒரேநாளில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய கரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி  நேரத்தில் 3,996 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வியாழக்கிழமை நிலவரப்படி 3,991 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. இன்றைய பாதிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டில் இதுவரை 1,43,117 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 605 ஆக உயர்ந்துள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 2,359 பேருக்கும், அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 1,637 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்று பாதித்து 34,458 மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 1,08,001 பேர் இந்த நோயால் குணமாகியுள்ளனர். 53 பேர் வைரஸ் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை 50,044 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 23 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT