இந்தியா

வெள்ள பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்

11th Sep 2020 07:39 PM

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநில விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த இடைவிடாத மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தின. இதனால்  விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரூ.300 கோடி மதிப்பிலான நிவாரண உதவியை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். அதன்படி ரூ .6,800 க்கு மேல் பயிர் இழப்பைச் சந்தித்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு ரூ .13,500 மற்றும் அனைத்து வகையான வற்றாத பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோதுமை உள்ளிட்ட ரபி பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விதை சுத்திகரிப்பு இரசாயனங்கள் / உயிர் பூச்சிக்கொல்லிகளை இலவசமாக வழங்கி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விதை சுத்திகரிப்பு திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளுக்கு 75 சதவீதம் அதிக மானியத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பு உதவி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT