இந்தியா

ஜார்க்கண்டில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா

11th Sep 2020 11:09 AM

ADVERTISEMENT

ஜார்க்கண்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 5 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 1,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,079-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 15,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 42,115 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 5 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 517-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT