இந்தியா

சீனர்கள் ஆக்கிரமித்த நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? - ராகுல் கேள்வி

11th Sep 2020 10:48 AM

ADVERTISEMENT

 

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை, பொருளாதார சரிவு போன்றவை கடுமையாக விமர்சித்து வந்த ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

ADVERTISEMENT

"சீனர்கள் நமது நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என்று விட்டுவிடப் போகிறதா?" மத்திய அரசு என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT