இந்தியா

பிகார்: தேர்வு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

11th Sep 2020 05:26 PM

ADVERTISEMENT

பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளும் மூடப்பட்டு மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிகாரில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பருவத்தேர்வை வைக்க வலியுறுத்தி இறுதியாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவிகள், உரிய நேரத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகளையும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

தேர்வு வைத்தால் மட்டுமே காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
 

Tags : பிகார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT