இந்தியா

கரோனா நோயாளிகளின் தகனத்துக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி: அசாம் அரசு முடிவு

11th Sep 2020 03:24 PM

ADVERTISEMENT

 

அசாம் மாநிலத்தில் கரோனா தொற்று நோயால் பாதித்து உயிரிழந்தவர்களின் தகனத்திற்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில், அசாம் மாநிலத்தில் பாதிப்பும், பலியும் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் உத்தரவில், 

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நோயாளிகளின் உடலை உறவினர்கள் யாரும் பெறாதபட்சத்தில், அவர்களின் இறுதிச்சடங்கிற்கு அசாம் அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. 

அந்தவகையில், கரோனா நோயால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் அசாம் அரசு ரூ.5 ஆயிரம் வரை நிதியுதவி வழங்க முடிவுசெய்துள்ளது. 

பொதுமுடக்கம் வழிகாட்டுதல்களின்படி, அசாமில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தனிமைப்படுத்துதலில் இருந்த விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி, மாநிலத்திற்கு வருகை தரும் ஒருவர் 10 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை, மற்ற பகுதியிலிருந்து மாநிலத்திற்குள் வரும் மக்களுக்கும் இது பொருந்தும். 

ஆன்டிஜென் விரைவு சோதனை மூலம் கரோனா சோதனை மேற்கொள்ளப்படும். அதில் எதிர்மறை வரும்பட்சத்தில் RT-PCR சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படும். அதன் முடிவுகள் வரும்வரை சுயமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில், அசாமில் கரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் 2,739 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாநிலத்தில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,35,805 ஆக அதிகரித்துள்ளது. ஏனெனில் பாதிப்பு விகிதம் 7% ஆக உள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,05,701 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில்  29,687 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 
 

Tags : financial assistance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT