இந்தியா

பாஜகவில் இணைந்தார் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பின்கி பிரமனிக்

11th Sep 2020 04:24 PM

ADVERTISEMENT

ஆசிய தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரரான பின்கி பிரமனிக் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் பின்கி பிரமனிக். இவர் கடந்த வியாழக்கிழமை மேற்குவங்க பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்த தகவலை வெளியிட்ட மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பின்கி இனி பாஜக குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிங்கி பின் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு கிழக்கு ரயில்வே துறையில் பணியாற்றி வந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக இறகுப்பந்து வீரர் சாய்னா நேவால், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்டவர்கள் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Pinki Pramanik
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT