இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 11.63 லட்சம் கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

11th Sep 2020 11:05 AM

ADVERTISEMENT


புதுதில்லி: நாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 11,63,542 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டில் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 5 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 975 கரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 11 லட்சத்து 63 ஆயிரத்து 542 க்கும் மேற்பட்டோருக்கு  கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரிசோதனை அதிகரித்து வருவதன் மூலம்  நோய்த் தொற்றுக்கு  பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று பரவலை  தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 11 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை. 

தமிழகத்தில் இதுவரை வரை 56,30,323 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 85,475 பேருக்கு  கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே கால அளவில் 1,115 பேர் பலியாகி உள்ளனர். 

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 89,706 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,70,129 -ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45,62,415 -ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,209 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 76,271-ஆக அதிகரித்தது. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,42,664 -ஆக உயா்ந்துள்ளது. 

Tags : coronavirustest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT