இந்தியா

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்: கே.சி.வேணுகோபால்

11th Sep 2020 10:09 PM

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரி, கோவா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட தகவலில், தமிழகம், புதுச்சேரி, கோவா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகல் வாஸ்னிக் மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், தெலங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி., ஜோதிமனி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து மோதிலால் வோரா, மல்லிகார்ஜூனா கார்கே, அம்பிகா சோனி விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக ராகுல் காந்தி, ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் நிரந்தர அழைப்பாளர்களாக மாணிக்கம் தாகூர், செல்லகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

காங்கிரஸில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கடிதம் எழுதிய 23 பேரில் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT