இந்தியா

பத்தனம்திட்டாவில் கரோனா நோயாளி தற்கொலை

10th Sep 2020 01:22 PM

ADVERTISEMENT

 

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் 41 வயதுடைய நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ஆம் தேதி  உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று பத்தனம்திட்டாவில் கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

நிஷாந்த் (41), மதுபானத்திற்கு அடிமையாகியிருந்த அவருக்கு கரோனா பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மது கிடைக்காத விரக்தியில் கரோனா மையத்தில் உள்ள மின்விசிறியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். 

ADVERTISEMENT

இந்தியாவில் தற்கொலைகளைப் பொறுத்தவரை கேரள மாநிலம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2019ஆம் ஆண்டில் கேரளத்தில் மொத்தம் 8,556 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2018ல் 8,237 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கேரளத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் விகிதம் 2019-ல் 24.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வருடம் 10.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT