இந்தியா

மேற்கு வங்க காங். தலைவரானார் அதீர் ரஞ்சன் சௌதரி

10th Sep 2020 02:29 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக அதீர் ரஞ்சன் சௌதரியை, அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை நியமித்தார். அதீர் ரஞ்சன் சௌதரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவராகவும் தற்போது பதவி வகிக்கிறார். 
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக அதீர் ரஞ்சன் சௌதரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டது. 
மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சோமன் மித்ரா காலமானதையடுத்து, அப்பதவி அதீர் ரஞ்சன் சௌதரிக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைப்படி ஒருநபர், ஒரு பதவியை மட்டுமே வகிக்கவேண்டும். 
எனவே மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக அதீர் ரஞ்சன் சௌதரி தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வரும் அதீர் ரஞ்சன் செளதரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT