இந்தியா

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பு: புதுவை முதல்வர் நாராயணசாமி

10th Sep 2020 05:45 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பு என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் கூறுகையில், ‘நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையை இந்த நீட் தேர்வு உருவாக்கியுள்ளது. மாணவர்கள் விரோதப்போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்து புதுவையில் முன்பு நடைமுறையில் இருந்த ‘செண்டாக்’ முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT