லடாக்கில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காஷ்மீரை சேர்ந்த லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதங்களில் அதிக அளவாக இருந்த கரோனா பாதிப்பு இடையில் சற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,142-ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 41 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக தொற்றிலிருந்து 2,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.