இந்தியா

கர்நாடகம், கேரளத்தில் கனமழைக்கு வாய்ப்பு

10th Sep 2020 03:24 PM

ADVERTISEMENT

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோன்று கர்நாடகம் மற்றும் கேரளத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.

பல்வேறு இடங்களில் பெய்த பருவமழையின் காரணமாக அணைகள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி உள்கர்நாடக பகுதிகளில் செப்டம்பர் 10 முதல் 13-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளிலும், தெற்கு உள்கர்நாடகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று கேரளத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்படுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT