இந்தியா

பெங்களூருவில் கன மழை: தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

10th Sep 2020 09:08 AM

ADVERTISEMENT


பெங்களூருவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கன மழையால், நகரில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

பெங்களூருவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. சாலைகளில் உள்ள வாகனங்களும் நீரில் மூழ்கி காணப்பட்டன. புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். 

அடுத்த மூன்று நாள்களுக்கு முறையே அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 31 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், வானம் மேகமூட்டமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (ANI)

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பெங்களூருவில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

Tags : heavy rain
ADVERTISEMENT
ADVERTISEMENT